Friday, April 30, 2010

நதியே நைல் நதியே.......
நைல் நதி உலகில் மிக நீளமான நதி. இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உகாண்டா நாட்டில் ஜிஞ்சா என்னும் இடத்தில் உள்ள  விக்டோரியா என்னும் ஏரியில் (Lake Victoriya). விக்டோரியா ஏரி உலகில் மிக பெரிய நல்ல தண்ணீர் ஏரியாகும். இது கிழக்கு ஆப்ரிகாவில் உள்ள ஐந்து நாடுகளில் மூன்று நாடுகளுக்கு மத்தியில் உள்ளது.


அவை


1. உகண்டா
2. கென்யா
3. தான்சானியா



இந்த நதியின் நீளம் 4600 மைல் அல்லது  6400 கி.மீ. ஆகும். விக்டோரியா ஏரியில் இன்று உற்பத்தியாகும் நீர் மூன்று நாடுகள் வழியாக பயணித்து MEDITERRANEAN கடலில் கலக்க மூன்று மாதங்கள் ஆகும்.

பயணிக்கும் நாடுகள்.


1. உகண்டா
2. சூடான்
3. எகிப்து

நைல் நதி உற்பத்தியாகும் இடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது என்ற பெருமையை இந்த நைல் நதி பெறுகிறது.


விக்டோரியா ஏரியில் உள்ள மீன்களில் மூன்று வகையான மீன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.


1. நைல் பாச்சி  ( Nile Perch)
2. டிலேபியா   (Tilapia)
3. மட் மீன்   (Mud Fish )


நைல் பாச்சி


இதன் எடை சுமார் 500 கிலோ ஆகும். இதன் எலும்புகள் நீக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.


டிலேபியா


இதன் எடை சுமார் 10 கிலோ ஆகும். இது மிகவும் சுவையான மீன்களில் ஒன்று.


மட் மீன்


இந்த மீன் பாம்பின் வடிவத்தை ஒத்தது. இதுவும் மிகவும் சுவையான மீன்களில் ஒன்று.

Thursday, April 22, 2010

ஏமாற்றம்

ஏமாற்றம்  என்ற சொல் அல்லது வார்த்தை நமது அன்றாட வாழ்வில் வழக்கமாக பழகிய வார்த்தை. நான் மிகவும் வெறுக்கும் இனிய வார்த்தை. எவருக்கும் பிடிக்காத சொல். எனது சிறுவயதில் என்னுடன் மிகவும் பழகிய சொல். ஆனால் இந்த சொல்லை பற்றி இப்போது நான் கவலை படுவது இல்லை. காரணம் இப்போது நான் பக்குவப்பட்டுவிட்டேன். ஏமாற்றம் எப்பொழுது ஏற்படுகிறது?  “ஏமாற்றதிற்கான காரணம் எதிர்பார்ப்பு” எங்கே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறதோ அது நடக்காதா போது நாம் ஏமாற்றம் அடைகிறோம். அது நம் மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டேன் (பக்குவ பட்டதால்). ஆனால் அறியா வயது குழந்தைகளுக்கு இது தெரியாது. அவர்கள் மனதில் இந்த ஏமாற்றம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்களுக்கு எதையாவது வாங்கித்தருவதாக கூறும் முன் பல முறை யோசனை செய்து நாம்மல் அது முடியும் எண்றாள் மட்டும் அதை கூறவும்.

எனக்கு மனதில் பட்டவை :-
     எதிர்பார்ப்பை குறைத்து ஏமாற்றத்தை தவிர்க்கவும்.

Wednesday, April 7, 2010

நில நடு கோடு ( Equator )


பூமியை வடக்கு, தெற்க்கு என இரண்டாக பிரிக்கும் கோடு. இதை பூமத்திய ரேகை எனவும் கூறுவர். இந்த நில நடு கோடு உகாண்டாவழியாக செல்கிறது. உகாண்டா (Pearl of Africa) ஆப்ரிக்காவின் முத்து என மௌன் பேட்டன்ஆல் சொல்லப்பட்ட நாடு. கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள அருமையான இயற்கை வழம் உள்ள நாடாகும். உகாண்டா. இடி-அமின் என்று சொன்னால் உடனே நமது நினைவுக்கு வரும் நாடு.

இந்த நில நடு கோடு எப்படி பட்ட இயற்கை அதிசயம் என்பதை பின் வரும் வீடியோ முலம் தாங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நாம் வடக்கு பகுதியில் இருக்கும் பொழுது இந்த வீடியோவில் பூ கடிகார முள் சுற்றும் திசையிலும், தெற்க்கு பகுதியில் இருக்கும் பொழுது இந்த வீடியோவில் பூ கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையிலும் சுட்ருகிறது.

நில நடு கோட்டில் எந்த பக்கமும் சுற்றுவது இல்லை.